பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா உணவகத்தில் இனி 3 வேளை உணவு' 

Added : மே 23, 2020
Share
Advertisement
 'அம்மா உணவகத்தில் இனி 3 வேளை உணவு' 

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், அமைச்சர் வேலுமணி நேற்று ஆய்வு நடத்தினார்.ஆய்வுக்குப் பின் அவர் பேசியதாவது:ஊரடங்கு முடியும் வரை, அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில், உணவு வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உணவின் அளவை உயர்த்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 12, நகராட்சிகளில் உள்ள 3 அம்மா உணவகங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, தனியார் நிறுவனம் சார்பில், 9.75 ரூபாய் மதிப்பிலான வென்டிலேட்டர், அமைச்சர் வேலுமணி, கலெக்டர் ராஜாமணி முன்னிலையில், மருத்துவமனை (பொ) டீன் காளிதாஸிடம் வழங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் பிரசன்னா, எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X