பொது செய்தி

இந்தியா

தேசியம் பிட்ஸ்

Added : மே 23, 2020
Share
Advertisement

முதல்வருக்கு கொலை மிரட்டல்லக்னோ: உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், அதற்காக, அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய போவதாகவும், நேற்று முன்தினம் நள்ளிரவில், காவல்துறை தலைமையகத்தின், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவல் அனுப்பப்பட்ட எண் குறித்து, போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.கொரோனாவுக்கு புதிய மருந்துபுனே: புனே அரசு மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, நோய் தொற்று சிகிச்சைக்கு பயனளிக்கும் 'டோசிலிசுமாப்' மருந்தை, ஊசி மூலம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது என்பதுடன், முதற்கட்டமாக, 25 பேருக்கு செலுத்தவும், அதன் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும், டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.பேரிடர் மீட்பு படை எஸ்.ஐ., பாதிப்புபுதுடில்லி: என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையின், எஸ்.ஐ., ஒருவர், விடுமுறையில் இருந்ததாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் நேற்று கூறினர். இப்பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபரான இவர், நொய்டாவில், மத்திய ஆயதப்படை போலீசாருக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் போலீசுக்கு அமைச்சர் பாராட்டுமும்பை: மஹாராஷ்டிராவின், மும்பை ஷாகு நகர் காவல் நிலைய எல்லையில், கொரோனா வைரசால் பலியானவர் உள்ளிட்ட, ஆதரவற்ற நால்வரின் உடல்களுக்கு, ஊரடங்கு நேரத்தில், பெண் போலீஸ் சந்தியா ஷீல்வந்த், இறுதிச் சடங்குகளை நடத்தியுள்ளார். அவருக்கு, மாநில உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக் பாராட்டு தெரிவித்துள்ளார்.மூத்த குடிமக்களின் அச்சம்புதுடில்லி: டில்லியின் தெற்கு பகுதியில், சுகாதார பணியாளர்களை அரசு தங்க வைத்துள்ளது. அவர்களை இடமாற்றம் செய்ய கோரி, அருகில் வசிக்கும் மூத்த குடிமக்கள், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில், மக்களுக்காக உழைக்கும் சுகாதார பணியாளர்களை, இடமாற்றம் செய்ய முடியாது என்றாலும், மூத்த குடிமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கும், மாநகராட்சிக்கும், நீதிபதி, ஆஷா மேனன் உத்தரவிட்டார்.ரஷ்யாவில் ஒரே நாளில் 150 பேர் பலிமாஸ்கோ: ரஷ்யாவில், 'கொரோனா' தொற்றுக்கு, கடந்த 24 மணி நேரத்தில், 150 பேர் பலியாகி உள்ளனர். அங்கு, பலி எண்ணிக்கை, 3,249 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 9,000 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மொத்த பாதிப்பு எண்ணிக்கை, மூன்று லட்சத்து, 26 ஆயிரமாக உள்ளது.இந்திய ஆதரவு கோரும் சீனாபீஜிங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மக்கள் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர, சீன பார்லிமென்ட்டில், தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவை, சீனா கோரியுள்ளது.சாலை விபத்தில் 43 பேர் பலிகெய்ரோ: வட ஆப்ரிக்க நாடான சூடானின், வடக்கு டர்பூர் மாகாணத்தில், பயணியரை ஏற்றி வந்த லாரி, மற்றொரு வாகனத்துடன், நேற்று முன் தினம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 43 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான வாகனத்தில் தீ பிடித்ததை அடுத்து, பலர் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது.சீ--------------------னாவில் தொடரும் தொற்றுபீஜிங்: சீனாவில், 'கொரோனா' தொற்று, முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிட்டது என, கருதப் பட்ட நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக, புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. புதிதாக நான்கு பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது. அறிகுறிகள் இல்லாமல், சந்தேகத்துக்கு இடமான 372 பேர், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 82 பேருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போர் நிறுத்த அறிவுறுத்தல்நியூயார்க்: 'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, சர்வதேச அளவிலான அனைத்து நாட்டு அரசுகள், அமைப்புகள், தனி நபர்கள் என, பல்வேறு தரப்பிலும், போர் நிறுத்தத்தை கடைப் பிடிக்க, கடந்த, மார்ச், 23ல் ஐ.நா., அறிவுறுத்தியது.கடந்த, 2019ல், 10 மேற்பட்ட நாடுகளில், 20 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல லட்சம் பேர், போரினால், வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்ததாகவும், ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார். 'கொரோனா' போன்ற நெருக்கடி நேரங்களில், போர் நிறுத்தம் மிகவும் அவசியம் என, அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X