பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தோர், 14,753 குணமடைந்தோர், 7,128 பேர் கொரோனா நிலவரம்

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் கொரோனாவால், 14 ஆயிரத்து, 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில், 7,128 பேர் குணமடைந்துள்ளனர்.

இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், தற்போது, 7,524 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறும் அறிகுறியுடன், 5,349 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.நேற்று மட்டும், 12 ஆயிரத்து, 653 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டதில், 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த, 66 பேரும்; டில்லி, 13; மேற்கு வங்கம், ஆறு; ஆந்திரா, இரண்டு; குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களில், தலா, ஒருவரும் அடங்குவர்.

மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த, ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் மட்டும் நேற்று, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 40 பேர்; திருவள்ளூர், 39 பேர்; காஞ்சிபுரம், 13 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை, 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில், 14 ஆயிரத்து, 753 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 9,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நோயில் இருந்து மீண்டு, நேற்று ஒரே நாளில், 846 பேர் வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து மொத்தம், 7,128 பேர் குணமடைந்துள்ளனர்.தனியார் மருத்துவமனையில் இருந்து கடைசி நேரத்தில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சென்னையைச் சேர்ந்த, 81 வயது நபர், நேற்று உயிரிழந்தார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த, 51 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, தேனியைச் சேர்ந்த, 70 வயது நபர், செங்கல்பட்டு மருத்துவ மனையில், 72 வயது நபர் ஆகியோரும் நேற்று உயிரிழந்தனர். இதுவரை, 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் / நேற்று முன்தினம் / நேற்று /குணம் அடைந்தோர் / இறப்புஅரியலுார் 355 355 348 0செங்கல்பட்டு 655 695 233 6சென்னை 8,795 9,364 3,773 67கோவை 146 146 144 1கடலுார் 421 421 405 1தர்மபுரி 5 5 5 0திண்டுக்கல் 132 133 106 1ஈரோடு 70 71 69 1கள்ளக்குறிச்சி 120 121 61 0காஞ்சிபுரம் 236 249 150 1கன்னியாகுமரி 49 49 24 1கரூர் 80 80 55 0கிருஷ்ணகிரி 21 22 18 0மதுரை 191 224 111 2நாகை 51 51 46 0நாமக்கல் 77 77 77 0நீலகிரி 14 14 12 0பெரம்பலுார் 139 139 133 0புதுக்கோட்டை 15 18 7 0ராமநாதபுரம் 39 52 26 1ராணிப்பேட்டை 88 89 60 0சேலம் 49 49 35 0சிவகங்கை 29 29 13 0தென்காசி 83 83 51 0தஞ்சாவூர் 80 80 66 0தேனி 96 101 50 2திருப்பத்துார் 30 30 26 0திருவள்ளூர் 636 675 243 8திருவண்ணாமலை 171 173 75 0திருவாரூர் 32 35 32 0துாத்துக்குடி 135 144 34 2திருநெல்வேலி 253 271 93 1திருப்பூர் 114 114 114 0திருச்சி 68 72 66 0வேலுார் 35 38 28 1விழுப்புரம் 322 322 296 2விருதுநகர் 69 95 43 0வெளிநாட்டில் இருந்து வந்தோர் 61 62 0 0ரயிலில் இருந்து வந்தோர் 5 5 0 0மொத்தம் 13,967 14,753 7,128 98

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X