பொது செய்தி

தமிழ்நாடு

கதர் முகக்கவசங்கள் ஏற்றுமதி செய்ய திட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர்;உலகம் முழுதும், முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய, கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது.'கொரோனா' பரவலைத் தொடர்ந்து, உலகம் முழுதும், முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கதர் மற்றும் கிராமத்தொழில் வாரிய (கே.வி.ஐ.சி.,) அதிகாரிகள் கூறியதாவது:இதுவரை, எட்டு லட்சம் முகக்கவசங்கள் தயாரிப்பதற்கான, 'ஆர்டர்'களை, கே.வி.ஐ.சி., பெற்றுள்ளது. ஊரடங்கு காலத்தில், 6 லட்சம் முகக்கவசங்களை வினியோகித்துள்ளது.
உலகம் முழுதும், முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.'உள்ளூருக்கான குரல்' என்ற முழக்கத்துடன், உள்ளூரிலேயே இவற்றைத் தயாரிக்க முடியும். அமெரிக்கா, துபாய், மொரிசீயஸ், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, கதர் முகக்கவசங்களைத் தயாரித்து அனுப்ப, முதற்கட்டமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏற்றுமதி செய்வதால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
விலை மலிவு, எளிய சுவாசம், மறு பயன்பாடு, மக்கும் தன்மை உள்ளிட்டவற்றால், கதர் முகக்கவசங்களுக்கான தேவை, எதிர்காலத்தில், அதிகரிக்கும். செயற்கையிழைகள் மூலம் தயாராகும் முகக்கவசங்களில், காற்று உட்புகாது. ஆனால், இரட்டை முறுக்கு கதர்த்துணிகளால் தயாரிக்கப்படும், கதர் முகக்கவசங்களில், காற்று எளிதில் புக முடிவதோடு, ஈரத்தன்மையையும் தக்கவைக்கும். ஒவ்வாமை பிரச்னைகளும் ஏற்படாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X