பொது செய்தி

தமிழ்நாடு

மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டம் :காலக்கெடு நீட்டித்த மத்திய அரசு

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:மத்திய அரசு, மூத்த குடிமக்கள், ஓய்வூதியம் பெறும் வகையிலான முதலீட்டு திட்டத்தில் சேர, காலக்கெடுவை, 2023 மார்ச் வரை நீட்டித்துள்ளது.மத்திய அரசு, 2017ம் ஆண்டு, மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தை எல்.ஐ.சி., நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது. இதில், முதலீடு செய்யும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு எட்டு சதவீதம் வரை வட்டி உறுதியாகக் கிடைக்கும். இதில் சேர, உயர் வயது வரம்பு கிடையாது.மூத்த குடிமக்களுக்கான பிற ஓய்வூதிய திட்டங்களின் வட்டிவிகிதம் குறைந்தாலும், இத்திட்டத்தில் அளிக்கப்படும் வட்டி விகிதம் நிரந்தரமானதாக இருக்கும். இதில், 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஒரு ஆண்டு வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.திட்டத்தின் மொத்த காலம் 10 ஆண்டுகள். இதில், முதலீடு செய்வோருக்கு, தங்களுக்கு எந்த இடைவெளியில் பணம் தேவை என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச முதலீட்டை, அவரவர் ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் நிதியின் அடிப்படையில் தீர்மானித்துக்கொள்ளலாம்.அதிகாரிகள் கூறுகையில், 'இத்திட்டத்தில் முதலீடு செய்ய, மார்ச் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 2023 மார்ச் 31 வரை, முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து, இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மூத்த குடிமக்கள் பலர் பயன்பெற வாய்ப்பு உண்டு' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X