ஈழுவா, தியா ஜாதி சான்று பெற பரிந்துரை அனுப்ப அழைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈழுவா, தியா ஜாதி சான்று பெற பரிந்துரை அனுப்ப அழைப்பு

Added : மே 23, 2020
Share

ராமநாதபுரம், மே 23-

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஏப்., 21 ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளரை தலைவராக நியமித்து, நான்கு உறுப்பினர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈழுவா, தியா சமுதாயத்தினர் ஜாதி சான்று பெறுவது தொடர்பான கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் மே 26 க்குள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பலாம். அல்லது குழுவின் உறுப்பினர் செயலர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலக விரிவாக்க கட்டடம், 2ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும், மின்னஞ்சல் முகவரி dir-combc@in.gov.in, dbcwotnrmd@yahoo.in, dbcwo tnrmd@nic.in வாட்ஸ் ஆப் எண் 94454 77843 மூலமாகவும் அனுப்ப லாம், என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துஉள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X