பொது செய்தி

இந்தியா

பொறுமைக்கு உதாரணம் அஜித்!

Added : மே 23, 2020
Share
Advertisement

நடிகர் அஜித்தை நடிக்க வைத்த, பிரபல இயக்குனர் வசந்த்: கடந்த, 90-ம் ஆண்டுகளில், சினிமா ரசிகர்களுக்கு, ஆசை நாயகன் என்றால், அது, அஜித் தான்.அமராவதி படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவருக்கு அடையாளம் கொடுத்த படம், ஆசை!

மணிரத்னம் தயாரிப்பு, என் இயக்கம் என, பெரும் எதிர்பார்ப்போடு வந்த படம் அது.அந்தப் படத்தின் கதையை எழுதி முடிச்சுட்டு, ஹீரோவை தேடிட்டு இருந்தேன். சரியாக சொல்லணும்னா, இன்னொரு அரவிந்த்சாமியைத் தேடிக் கொண்டிருந்தேன். அரவிந்த்சாமி கிட்ட, 'டேட்ஸ்' இல்லாததால், ஆசை படத்தில் அவரால் நடிக்க முடியலை. இந்தக் கதைக்கு, ஓர் அழகன் தான் வேணும். பொண்ணுகளுக்கு அவனைப் பார்த்த உடனே பிடிக்கணும்; ஒரு, 'க்ரேஸ்' இருக்கணும்னு, முயற்சியைக் கைவிடாம தேடிட்டு இருந்தேன்.அரவிந்த்சாமி இல்லாததால், புதுமுகம் தான் தேடினேன்.

சேட்டிலைட் சேனல்கள் இல்லாத காலம் அது. துார்தர்ஷன் மட்டும் தான் இருந்தது. அதுலயும், 'ஒலியும் ஒளியும்' நிகழ்ச்சிக்கு முன்னாடி மட்டும் தான் விளம்பரங்கள் போடுவாங்க. அதில், ஒரு வேட்டி நிறுவன விளம்பரத்தில், அஜித் நடிச்சிருந்தார். என், 'டீம்ல' இருந்த புரொடக்ஷன் மேனேஜர் ஒருத்தர், என்கிட்ட அந்த விளம்பரத்தைக் காட்டி, 'நீங்க எதிர்பார்க்குற மாதிரியான ஹீரோ'ன்னு, அஜித்தை சொன்னார்.வேட்டி கட்டிட்டு, ஒல்லியா ஒரு பையன், மாடி படியிலேருந்து இறங்கி வர மாதிரியான காட்சி, அந்த விளம்பரத்துல இருந்தது. எனக்குப் பார்த்ததும், ரொம்பப் பிடிச்சு போச்சு. அவரை எனக்கு அறிமுகப்படுத்தின புரொடக்ஷன் மேனேஜர் மூலமாகவே, அவரை பிடிக்கலாம்னு முயற்சி பண்ணிய போது தான், அஜித் ஏற்கனவே, படங்களில் நடிச்சிருக்கார்ங்கிற தகவல் தெரியவந்தது. உடனே, அவர் நடிச்ச, அமராவதி படம் பார்த்தேன்.

ரொம்ப ஒல்லியாக இருந்தார் என்பதைத் தவிர மத்தபடி, எனக்கு அஜித்தை ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு அஜித்கிட்ட பேசி, அவரைச் சந்திக்க, ஆழ்வார்பேட்டைல இருக்கற அலுவலகத்துக்கு வரச் சொல்லிஇருந்தேன். 'பைக்'ல தான் வந்தார். அப்போ, அவர் பைக்ல தான் வருவார், போவார். நேர்ல பார்க்க இன்னும், ஸ்மார்ட்டா இருந்தார். என் கதைக்கு ஹீரோ கிடைச்சாச்சுன்னு, எனக்கு பயங்கர சந்தோஷம். ஆசை படம் எடுத்து கிட்டத்தட்ட, 25 வருஷங்கள் ஆகுது. இத்தனை வருஷங்கள் கழிச்சும், அஜித்னு சொன்னா, எனக்கு உடனே நினைவுக்கு வர விஷயம், அவரோட, 'ஆட்டிட்யூட்' தான். யாரையும் கோபமா பேசுறதோ, சத்தம் போடுறதோ, அவர்கிட்ட பார்க்க முடியாது. அந்த சமயத்துலயே, அஜித்துக்கு அவ்வளவு பொறுமையும், 'மெச்சூரிட்டி'யும் இருக்கும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X