சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்:===  

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை இன்ஸ்பெக்டர் மோகன் 58, பாதுகாப்பு பணிகளுக்கிடையே ஏழை குடும்பத்தினர் மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு உணவு, மாஸ்க், சானிடைசர் வழங்கினார். அவர் நிவாரணம் வழங்கும் பணி பற்றி மே 20ல் சமூக வலைதளத்தில் அவதுாறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டனர். தலைமை காவலர் பிரபு சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., முருகேசன் வழக்கு பதிந்தார். வீடியோ தயாரித்தவர், வெளியிட்டோர் விபரங்களை சேகரித்து அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் மணல ் கடத்தல்
திருப்புத்துார் பகுதியில் பாலாறு,விருசுழியாறு,மணிமுத்தாறு உள்ளிட்ட காட்டாற்றுகளில் முன்பு அனுமதி பெறாமல் மணல் அள்ளப்பட்டது.போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தும் தடுக்க முடியவில்லை.

தற்போது கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கை அடுத்து பல கெடுபிடி நடவடிக்கைகளால் ஆறுகளில் மணல் திருட்டு குறைந்தது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் அதிகரித்து ஓரளவு சகஜநிலை திரும்பியுள்ள நிலையில்,மணல் திருட்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

அண்மையில் கண்டவராயன்பட்டி போலீசார் திருட்டு மணல் வாகனத்தை கைப்பற்றினர். தனியார் தோட்டத்தில் செம்மண் அள்ளுவதாக அனுமதி பெற்று ஆற்று மணலும் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பாலாறு கரையில்தென்னந்தோப்புகள் விரைவில் பட்டுபோகும் அபாயமும், கிணறு போல ஆழமாக தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்படும் போது திருப்புத்துார் உள்ளிட்ட பல கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.

முன்பு சவடு மண், கிராவல் அள்ளுவதாக அனுமதி பெற்றுமணல் திருட்டு நடந்தது. தற்போது செம்மண் அனுமதி பெற்று ஆற்றில் இந்த மணல் அள்ளப்படுவது தொடர்கிறது. உள்ளூரில் மணல் விற்க அனுமதிகட்டட வேலைகளை தொடர வேண்டிய நிலையில் மக்கள் யூனிட்டுக்கு ரூ 6 ஆயிரம் வரை கூடுதல் விலை கொடுத்து இந்த மணலை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர்க்க அரசு வரைபட அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் கட்டடத்திற்கு ஏற்ப உள்ளூர் ஆறுகளில் மணல் அள்ள அரசே அனுமதிக்கலாம். அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படும். மணல் விலையும் நியாயமாக இருக்கும், விதிப்படி ஒரு மீட்டருக்கு மட்டும் மணல் அள்ளலாம். இதனால் நீர் வரத்தும், நிலத்தடிநீரும் பாதிக்காது என்று பொறியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X