அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்: முருகன்

Added : மே 23, 2020
Share
Advertisement
 பத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்ற  மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்: முருகன்

சென்னை : ''பத்திரிகை துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, மத்தியஅரசிடமும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்துவோம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் கூறினார்.

கொரோனா ஊரடங்கால், பத்திரிகை நிறுவனங்கள், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நெருக்கடியில் இருந்து மீள, எம்.பி.,க்கள் வாயிலாக, அழுத்தம் தரும்படி, அரசியல் கட்சி தலைவர்களை, பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள்சந்தித்து, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி நேற்று, தமிழக பா.ஜ., தலைவர் முருகனை, சென்னை கமலாலயத்தில், 'தினமலர்' இல.ஆதிமூலம், 'தி ஹிந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினர்.அவர்கள் அளித்த மனுவில், 'தினத்தந்தி' அதிபர் எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

'செய்தித் தாள்கள் மீதான சுங்க வரியை குறைக்க வேண்டும். அரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.'அரசு விளம்பர கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.இந்த சந்திப்பின் போது, பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன், மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக, முருகன் கூறியதாவது:'பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். செய்தித் தாள்களுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பத்திரிகைகளுக்கு வைத்துள்ள விளம்பர நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.'அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை, மத்திய அரசுக்கு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி, பத்திரிகை துறையை பாதுகாக்கும்படி, மத்திய அரசிடமும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X