பொது செய்தி

தமிழ்நாடு

தோப்புக்கரண போராட்டம் :இந்து முன்னணி அறிவிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:'கோவில்களை திறக்க வேண்டும். இல்லாவிடில், வழிபாட்டு உரிமைகளை மீட்க, 26ம் தேதி கோவில்கள் முன் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடக்கும்' என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:'கொரோனா' பயத்தில் இருந்து மக்களுக்கு நிச்சயம், ஆன்மிக வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களின் வழிபாடு, கூட்டு வழிபாடு கிடையாது. பெரிய கோவில்கள் தவிர, மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு. கிராமங்களில் உள்ள கோவில்களில் கூட்டம் வருவதில்லை. சில தனியார் கோவில்கள் நிறைய ஆன்மிக ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது.அவ்வகையில், கிராமபுற கோவில்களையும், கூட்டம் வராத நகர்ப்புற கோவில்களையும் உடனே திறக்கலாம். மிகப்பெரும் கோவில்களுக்கு, சமூக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம்.எனவே, கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என, பக்தர்கள் காத்து கொண்டுள்ளனர். மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம். கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வரும், 26ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி, தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை நடத்துவோம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X