ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கேள்வியால் சர்ச்சை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கேள்வியால் சர்ச்சை

Added : மே 23, 2020
Share

ஆத்துார் : ஆத்துாரில் நடந்த ஒன்றிய கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க.,- பா.ம.க., பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்று, கேள்வி எழுப்பியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார் ஒன்றிய சேர்மன் அறையில் நேற்று, 15வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு, பணிகள் தேர்வு செய்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சேர்மன் லிங்கம்மாள் தலைமையில் நடந்தது. ரூ.1.18 நிதி ஒதுக்கீடுஇதில், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அருள்பாரதி பேசியதாவது:மத்திய அரசு மூலம் ஆத்துார் ஒன்றியத்துக்கு, 1.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த நிதியில், குடிநீர், சாலை சீரமைப்பு, மழை நீர் சேகரிப்பு, கழிப்பறை கட்டுதல், தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம்.

ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி பாகுபாடின்றி, பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.கூட்டத்தில், தி.மு.க., பெண் கவுன்சிலர்கள், கயல்விழி கணவர் அன்பரசு, தனலட்சுமி கணவர் சசிகுமார், பா.ம.க., பெண் கவுன்சிலர் பூவாயி கணவர் பச்சமுத்து ஆகியோர் பங்கேற்று, பி.டி.ஓ.,க்களிடம் திட்டப் பணிகள் குறித்து, கேள்வி எழுப்பினர்.இது, பிற கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன், ''கவுன்சிலர்களுக்கு போடப்பட்ட இருக்கையில், தி.மு.க., பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், முன்வரிசையில் அமர்ந்து கொண்டனர். கவுன்சிலரான நான் பின்னால் அமர வேண்டிய நிலை ஏற்பட்டதால், எழுந்து வந்து விட்டேன்,'' என்றார்.

விளக்கம் கேட்க முடிவுபி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அருள்பாரதி கூறுகையில், 'நாங்கள் புதிதாக இங்கு வந்துள்ளோம்; பெண் கவுன்சிலரின் கணவர்கள் பங்கேற்றது தெரியவில்லை. இனி, இதுபோன்ற நிகழ்வு ஏற்படாது' என்றனர்.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, உதவி இயக்குனர் கோபிநாத் கூறுகையில், ''பெண் கவுன்சிலரின் கணவர்கள் பங்கேற்றது தவறானது. இதுதொடர்பாக, பி.டி.ஓ.,விடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X