பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் 10 சதவீதமாக குறைப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி சந்தா, 12 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர் மதியழகன் அறிக்கை:'கோவிட் 19' காரணமாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, நிறுவனம் மற்றும் ஊழியர்களின் சந்தா தொகை, 12 சதவீதத்தில் இருந்து தற்போது, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இச்சலுகை மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களுக்கு பொருந்தும்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் இருந்து விலக்கு பெற்ற நிறுவனங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது.சந்தா குறைவாக பிடிக்கப்படுவதால் தொழிலாளர் பெறும் மாத சம்பளம் அதிகமாகும். நிறுவனம் செலுத்தும் சந்தா தொகை குறையும். இருவருக்கும் தமது பங்களிப்பில், இரண்டு சதவீதம் சந்தா தொகை மிஞ்சும்.
இத்திட்டம், மூன்று மாதங்களில் புதிதாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.விருப்பமுள்ள ஊழியர் மற்றும் முதலாளிகள், 10 சதவீதத்தை விட அதிகமான சந்தா தொகை செலுத்த விரும்பினால் அவ்வாறே செலுத்தலாம். கோவை மண்டலத்தில், 18 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X