சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வீரமங்கை தனு' பதிவிட்டவர் கைது

Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருப்பத்துார் : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக்கு காரணமான தனுவை, வீரமங்கை என, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில், 1991 மே, 21ல் மனித வெடிகுண்டு தாக்குதலால், கொலை செய்யப்பட்டார். மே, 21ல், ஆண்டுதோறும், பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் பிரபாகரன், 29; கட்டட தொழிலாளி. இவர், ராஜிவ் கொலைக்கு முக்கிய காரணமாக தனுவை, 'வீரமங்கை' என, நேற்று முன்தினம், 'வாட்ஸ் ஆப்'பில், பதிவு செய்துள்ளார்.அதில், 'வீர வணக்கம், தமிழின பகை முடித்த வீரமங்கை தனு' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு குறித்து, ஆம்பூர் போலீசார் விசாரித்து, பிரபாகரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
puratchiyalan - Nagercoil,இந்தியா
23-மே-202013:13:40 IST Report Abuse
puratchiyalan முதலில் இந்த கொலைக்கான உண்மையான குற்றவாளியை இன்னும் கண்டுபிடித்து தண்டனை குடுக்க வில்லை. அரசியல் அமர்வு தளர்த்தப்பட்டு விட்டதோ.. அம்பை எடுத்தனர், ஏய்தவனை விட்டுவிட்டனர்.. உண்மையான குற்றவாளிகள் சுப்ரமணிய சாமி, சந்திரா சாமி எப்படி இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அன்றைய புலன் விசாரணை தலைவர் கார்த்திகேயன், இதில் உண்மையை மூடி மறைத்து விட்டார். இவர்கள் மூவரையும் தான் முதலில் தூக்கில் போட்டிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202005:40:20 IST Report Abuse
Girija இவனை தூக்கில் போடவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X