சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 வயது பெண் குழந்தையை கொன்ற தொழிலாளி கைது

Added : மே 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 2 வயது பெண் குழந்தையை கொன்ற தொழிலாளி கைது

வேலுார் : கே.வி. குப்பம் அருகே, 2 வயது பெண் குழந்தையை, தரையில் அடித்து கொன்ற கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த வள்ளலாரைச் சேர்ந்தவர் லாவண்யா, 20. ஜோலார்பேட்டை அருகே பாய்ச்சல் என்ற இடத்தை சேர்ந்த கார் டிரைவரை மணந்து, 2 வயதில் கலைரஞ்சனி என்ற பெண் குழந்தை இருந்தது.கருத்து வேறுபாடால், கணவரை பிரிந்து, கே.வி. குப்பத்தில், மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, கட்டட தொழிலாளி பிரவீன்குமார், 21, என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவரிடம், முதல் திருமணத்தை மறைத்த லாவண்யா, கலைரஞ்சனியை தன் உறவினர் வீட்டு குழந்தை, ஏழையாக இருப்பதால் தான் வளர்ப்பதாக கூறியுள்ளார்.

பிப்., 5ல், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த, 17ல் கலைரஞ்சனி இறந்து கிடந்தார்.லாவண்யா புகார்படி, கே.வி. குப்பம் போலீசார், பிரவீன்குமாரை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:கடந்த, 17 இரவு பிரவீன்குமார், அவரது தந்தை வெங்கடேசன், 58, ஆகியோர் குடி போதையில் இருந்தனர். அப்போது, கலைரஞ்சனியை, பிரவீன்குமார் கொஞ்சி கொண்டிருந்தார்.இதைப் பார்த்த வெங்கடேசன், 'யாரோ பெற்ற குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறாயே' எனக் கேட்டுள்ளார்.

இதனால், பிரவீன்குமார், 'யார் பெற்ற குழந்தை' என, லாவண்யாவிடம் கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி, 'முதல் கணவருக்கு பிறந்த குழந்தை' என்ற ரகசியத்தை லாவண்யா உடைத்தார். இதனால், ஆத்திரமான பிரவீன்குமார், குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
27-மே-202016:12:33 IST Report Abuse
TechT அந்த பெண்ணையும் கொஞ்சம் திட்டவும், காம க்ரதாகி, குழந்தை இருக்கு அதை ஆதாரமாக வைத்து வாழவேண்டியதுதானே?? இதுதான் இன்றைய பெண்ணியம்... மகளிர் காவல் நிலையங்கள் இதுபோன்ற தறுதலை பெண்களுக்கு முட்டு கொடுக்கவே செயல் படுகிறது . அந்த மெண்டல் ரெண்டாவது புருஷன் அந்த பெண்ணை தாக்கி இருந்தால் பரவாயில்லை ...குழந்தை என்ன தப்பு செய்தது ...பாவம் ....
Rate this:
Cancel
Indian - ..,இந்தியா
27-மே-202010:48:27 IST Report Abuse
Indian இவனுக்கெல்லாம் திருமணம் ஒரு கேடு. கேடுகெட்ட மனித விஷ ஜந்துக்கள். ஆன்மிக சிந்தனை துளியும் இல்லாமல் சினிமா மோகத்தில் இருந்துகொண்டு பொறுமை, பக்குவம் வாழ்க்கையில் கடைபிடிக்காமல் கோவம், ஆத்திரம் இவர்களை அப்பாவி பிஞ்சு குழந்தைகள் இறப்பதற்கு வழி வகுக்கிறது. சினிமாவில் வில்லத்தனம் எதோ நிகழ்வுகளை அபரிவிதமாக காட்சிகளை அமைத்து இளைஞர்களை தப்பான வழியில் நடத்தி செல்வதனால் இந்தமாதிரி சீர்கேடுகள் நிகழ்வது நமக்கு ஒரு செய்தியாகத்தான் வரும். இறை நம்பிக்கை , ஆன்மிகம் இவற்றால் மட்டுமே ஒரு சமுதாயம் ஆக்கபூர்வமாக வாழ முடியும்.
Rate this:
Cancel
puratchiyalan - Nagercoil,இந்தியா
23-மே-202013:16:38 IST Report Abuse
puratchiyalan இவனுக்கு துக்கு தண்டனை குடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X