சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.எஸ்., ஆதரவாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி

Added : மே 23, 2020
Share
Advertisement

மதுரை : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதான, மூன்று பேரின் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் போலீசார், ஜன., 21ல் ரோந்து சென்றனர். சிலர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டது தெரிந்தது. அவர்களிடமிருந்து, கம்ப்யூட்டர் உட்பட சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கீழக்கரை, பிச்சைக்கனி, விழுப்புரம், முகமது அமீர், கடலுார், முகமது அலி ஆகிய மூவர் மீது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

பிச்சைக்கனி உட்பட மூவரும், 'எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நாங்கள் எப்படி கம்ப்யூட்டரை இயக்க முடியும்.'கன்னியாகுமரி மாவட்டத்தில், எஸ்.ஐ., வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு நிதி உதவி அளித்ததாகவும், உள்நோக்குடன் தவறாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, மனு செய்தனர்.அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X