சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்றவர் சூறை காற்றில் பறந்து பலி

Added : மே 23, 2020
Share
Advertisement
கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே, பைக்கில் சென்ற போது, சூறைக்காற்றால் துாக்கி வீசப்பட்டதில், வாலிபர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை முதல், இரவு வரை, சூறாவளி காற்றுடன், பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.கலசப்பாக்கம் அடுத்த வெளுங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 25, அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 23. இருவரும் நேற்று முன்தினம் மாலை,

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே, பைக்கில் சென்ற போது, சூறைக்காற்றால் துாக்கி வீசப்பட்டதில், வாலிபர் பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை முதல், இரவு வரை, சூறாவளி காற்றுடன், பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.கலசப்பாக்கம் அடுத்த வெளுங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 25, அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 23. இருவரும் நேற்று முன்தினம் மாலை, 'பஜாஜ் சிடி - 100' பைக்கில், நாயுமங்கலத்தில் இருந்து, வெளுங்கனந்தல் கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது, பலத்த சூறாவளி காற்று வீசியதில், இருவரும் பைக்கோடு துாக்கி வீசப்பட்டு, அருகில் உள்ள பாலத்தில் விழுந்து, படுகாயம் அடைந்தனர். ெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்திற்கு கால் முறிவு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X