சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருக்கலைப்பு அவசியமில்லை வழக்கை முடித்தது ஐகோர்ட்

Added : மே 23, 2020
Share
Advertisement

மதுரை : 'கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு நலமுடன் உள்ளது.

கருக்கலைப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை' என, திருநெல்வேலி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு அறிக்கையை ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை பைசல் செய்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, 2019ல் திருமணம் நடந்தது; அவர் கர்ப்பமுற்றார். ஒரு மருத்துவமனையில் அவருக்கு நடந்த பரிசோதனையில், 'கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இல்லை; பிறந்தாலும் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது' என, தெரிவிக்கப்பட்டது.அப்பெண், 'கருவிலுள்ள சிசு வளர்ந்து, 29 வாரங்களாகின்றன.

சூழ்நிலை கருதி, கருக்கலைப்பிற்கு அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.நேற்று முன்தினம், நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.நேற்று நடந்த விசாரணையில், 'சிசு நலமாக உள்ளது. தற்போதைய சூழலில், கருக்கலைப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை' என, திருநெல்வேலி அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவக்குழு, அறிக்கை தாக்கல் செய்தது.

காணொலியில், மனுதாரரின் கணவரிடம், நீதிபதி விசாரித்தார். அவர், 'குழந்தையை நல்ல முறையில் வளர்ப்போம்' என, உறுதியளித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை பைசல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X