பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதுகாப்பிலும் குதூகலம் முக கவசத்தில் கார்ட்டூன், நடிகர்கள் படம்

Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 கொரோனா பாதுகாப்பிலும் குதூகலம்  முக கவசத்தில் கார்ட்டூன், நடிகர்கள் படம்

சென்னை : கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, ஒவ்வொருவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற நிலையில், அதிலும் சிலர், குதுாகலமாக, நடிகர்களின் படங்கள், கார்ட்டூன் பொம்மைகள் வரையப்பட்ட கவசங்களை அணிந்து மகிழ்கின்றனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, தமிழக அரசு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், முக கவசம் அணியாமல், அத்துமீறி வெளியே நடமாடுபவர்களிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முக கவசம் அணியும் பழக்கம், மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையை அறிந்து, அனைத்து கடைகளிலும் முக கவசம் விற்பனை செய்யப்படுகிறது.

அதில், காட்டன், பனியன் துணி, நைலான் போன்ற பல தரத்தில், 20 முதல், 50 ரூபாய் வரை, பல வண்ணங்களில் சமூக விழிப்புணர்வு வாசகங்கள், குழந்தைகளை கவர கார்ட்டூன் பொம்மைகள், இளைஞர்கள் விரும்பும் நடிகர்களின் படங்கள்அச்சிடப்பட்டு, முககவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.சென்னை மட்டுமின்றி, திருப்பூர், திருச்சி, மதுரை, கோவை, சேலம் போன்ற நகரங்களிலும், இது போன்ற வித்தியாசமான முக கவசங்கள் அணிவதை, மக்கள் விரும்புகின்றனர்.இது குறித்து, சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த முக கவச விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:தற்போது, புதிதாக முக கவச விற்பனையை துவங்கியுள்ளேன். சென்னை, பாரிமுனை பகுதியில் மொத்தமாக வாங்கி, மயிலாப்பூர் தெற்கு மாட வீதி மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்கிறேன். தினமும், 150 முதல், 200 எண்ணிக்கையிலான முக கவசங்கள் விற்பனையாகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
23-மே-202014:47:19 IST Report Abuse
OUTSPOKEN அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா, வேலை கிடைக்குமா என்று தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் ஒரு பக்கம், பணம், வசதி இருப்பதால் எதை பற்றியும கவலைப்படாமல் இது போன்ற கிறுக்கு தனங்களை செய்து கொண்டிருக்கும் மக்கள் ஒரு பக்கம். நம் சமூகத்தில் இருக்கும அவலங்களின் இதுவும் ஒன்று
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202006:43:50 IST Report Abuse
Girija நம்ம ஊரில் சுய விளம்பரம், சினிமா பைத்தியங்களுக்கா பஞ்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X