சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் முன் தகராறு  சமுதாயக்கூட பூமி பூஜை ரத்து

Added : மே 23, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே கோவானுாரில் சமுதாயக்கூடம் கட்டும் இடம் தொடர்பாக அமைச்சர், கலெக்டர் முன் இருதரப்பினர் தகராறு செய்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இங்கு ரூ.20 லட்சத்தில் சமுதாயக்கூடம், ரூ.6.25 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் பூமி பூஜையை துவக்கி வைக்க சென்றனர். முதலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜையை அமைச்சர் துவக்கி வைத்தார்.

சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை துவங்கும் முன், அங்கிருந்த இரு தரப்பினரில், ஒரு தரப்பினர் கோயில் அருகே கட்டுமாறும், மற்றொரு தரப்பினர் வேறு இடத்தில் கட்ட வேண்டும் எனக்கூறினர். இது தொடர்பாக அமைச்சர், கலெக்டர் முன்னிலையில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சமுதாயக்கூடம் கட்டுவதற்கான இடத்தை கிராமத்தினர் தேர்வு செய்த பின் கட்டலாம் எனக்கூறி அமைச்சர், கலெக்டர் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X