சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து பாம்பு கடித்து பெண் பலி ; விசாரணை வளையத்துக்குள் கணவர்

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகர்கோவில் : கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு முறை பாம்பு கடித்து பெண் இறந்தது தொடர்பாக அவரது கணவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா. கணவர் சூரஜ். தனியார் கம்பெனி கிளார்க். 2018ல் திருமணம் நடந்தது. ஒரு வயதில் மகன் உள்ளான். கடந்த மாதம் பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில் இரவு துாங்கிய உத்ராவின் காலில் அணலி வகை பாம்பு கடித்தது. திருவல்லா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் உத்ரா, அஞ்சலில் உள்ள தாய் வீட்டில் ஓய்வில் இருந்தார்.அங்கு மே 6ல் மீண்டும் பாம்பு கடித்து இறந்தார். வீட்டில் இருந்த நாகபாம்பை உறவினர்கள் கொன்றனர்.

உத்ரா சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள்அஞ்சல் போலீசில் புகார் செய்தனர். அதில், உத்ரா மரணம் இயற்கையானதல்ல என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது.கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் படுக்கை அறையில் இருந்த பாம்பை சூரஜ் கையால் சர்வசாதாரணமாக பிடித்து கோணி பைக்குள் போட்டு எடுத்து சென்ற நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாம்பு உத்ராவை கடித்தது.அதன்பின் மாமியார் வீட்டுக்கு சூரஜ் வந்த மறுநாள் உத்ராவை பாம்பு கடித்தது.

பாம்பு கடித்த நாள் அதிகாலை 5:30 மணிக்கு சூரஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். தாய் வீட்டில் உத்ரா மாடியில் உள்ள ஏசி அறையில் தங்கினார். அதில் துவாரங்கள் முழுமையாக அடைக்கப்பட்டதால் பாம்பு வர வாய்ப்பு இல்லை. இதனால் சூரஜ் திட்டமிட்டு பாம்பை கடிக்க வைத்து உத்ராவை கொன்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. வரதட்சணை பிரச்னை இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அஞ்சல் போலீசார் சூரஜ்ஜை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
23-மே-202007:15:46 IST Report Abuse
வாய்மையே வெல்லும் புக்க கிரிமினல் பார்ட்டி இந்த சூரஜ்.. தான் கொலை செய்தால் மாட்டி கொள்வான் என்பதால் விலங்கை ஏவி விட்டு மனைவியையே தீர்த்து கட்டியுள்ளான். இது சாதாரண சாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இவனின் பாம்பு ஏவல் காரணமாகவே உயிர் பிரிந்து உள்ளது.. மிக துயரமான முற்றும் அதிர்ச்சி சாவு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X