சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் கரடிகள் முகாம்: மக்கள் வீடுகளில் முடக்கம்

Added : மே 23, 2020
Share
Advertisement
 கிராமத்தில் கரடிகள் முகாம்: மக்கள் வீடுகளில் முடக்கம்

கோத்தகிரி:கோத்தகிரி கடைகம்பட்டி குடியிருப்பு பகுதியில், இரண்டு நாட்களாக குட்டியுடன் முகாமிட்டுள்ள கரடிகளால், மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடைகம்பட்டி பகுதியில், நீர் ஓடையை ஒட்டி, புதர் மற்றும் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளதால், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, கிராம குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் நுழைந்த கரடிகள், அதே இடத்தில் முகாமிட்டுள்ளன.அதிகாலையில் தண்ணீர் பிடிக்க சென்ற பெண்கள், கரடிகளை கண்டு அச்சமடைந்து, வீட்டுக்குள் ஓட்டம் பிடித்தனர். அச்ச மடைந்துள்ள கிராம மக்கள், 'கரடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கவேண்டும்' என, வனத்துறையை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X