சம்பவம் செய்தி

தமிழ்நாடு

 3 பேருக்கு வெட்டு: 15 பேர் கைது

Added : மே 23, 2020
Share
Advertisement

இளையான்குடி:இளையான்குடி நடுவலசை முத்துக்குமார், ரஞ்சித், லோகு மூவரும் மெய்யனேந்தலுக்கு சென்றனர்.

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முன்பகை காரணமாக தகராறில் ஈடுபட்டு முத்துக்குமார், ரஞ்சித், லோகு மூவரையும் தாக்கி வெட்டியதில் ரஞ்சித்திற்கு கை துண்டானது. முத்துக்குமார், லோகுவிற்கும் வெட்டு விழுந்தது.இளையான்குடி போலீசார் காயமடைந்த மூவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மூவரை தாக்கியதாக கன்னியப்பன், அஜித் குமார், சுபாஷ், ஹரிஹரன், தவமணிகண்டன், சாத்தையா, முரளிதரன், ரெத்தினம், கார்த்திகேயன், கோகுலகண்ணன் சேதுபாண்டியன், உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X