நழுவும் பழ வியாபாரி நடவடிக்கை இழுபறி

Added : மே 23, 2020
Share
Advertisement

பல்லடம்:உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், ரசாயனம் தடவிய வாழைக்காய் விற்பனையில் ஈடுபட்ட, வியாபாரி மீது, நடவடிக்கை எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்காபுரத்தை சேர்ந்த வாழைப்பழ வியாபாரி வேல்முருகன் என்பவர், ரசாயனம் பயன்படுத்தி வாழைக்காய்களை பழுக்க வைத்து வந்தார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கையால், டிச., மாதம் பிடிபட்டு அபராதம் செலுத்தினார். இதன் வழக்கு விசாரணை, கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், மீண்டும் தில்லுமுல்லு வேலையை காட்டினார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,வேல்முருகனின் குடோனுக்கு, 'சீல்' வைத்தனர். அவர் மீது, உணவுபாதுகாப்பு துறை சட்டத்தில், வழக்குப்பதிவுசெய்து, கூடுதல் நடவடிக்கைக்காக டி.ஆர். ஓ.,விடம் அறிக்கை அளித்தனர். ஆனாலும் கூட, வாழைப்பழ வியாபாரி மீது நடவடிக்கை எடுப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வேல்முருகன் மீது, இரு மடங்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ., உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அன்றாடம் பயன்படுத்தும் எளிய உணவான பழங்களில், ரசாயனம் பயன்படுத்திய வேல்முருகனை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற தவறுகளை செய்பவர்களுக்கு, முன்னுதாரணமாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X