பொது செய்தி

தமிழ்நாடு

விரலுக்கு பதிலாக முகம்: பயோமெட்ரிக் முறை மாற்றம்

Added : மே 23, 2020
Share
Advertisement

-அவிநாசி:பொது சுகாதார பிரிவில், விரல் தொடும் அடையாளம் காட்டும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு முறைக்கு மாற்றாக, முக அடையாளம் காட்டும் முறை அமலுக்கு வர உள்ளது.சில மாதங்களுக்கு முன், மாநிலத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைக்கு வந்தது. கொரோனா வைரஸ் பரவலால், தொடுவதன் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.இதனால், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துத்துறை இயக்குனரகம், முகத்தை அடையாளம் காட்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில், நடைமுறைக்கு கொண்டு வரும் பணி துவங்கியுள்ளது. 'காலை, மாலை என, இரு நேரமும், பணியாளர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும்' என, சுகாதார துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X