சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாமி கும்பிட்ட பெண் சேலையில் தீ பிடித்து பலி

Added : மே 23, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில், கோவிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்ட பெண், சேலையில் தீப்பிடித்து பலியானார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர், கணேஷ்; மனைவி ஜமுனா, 48; இவர், நேற்று காலை, அதே பகுதியில் உள்ள, ஏழை முத்துமாரியம்மன் கோவிலுக்கு, சாமி கும்பிடச் சென்றார்.கோவிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்ட போது, அவரது சேலையில் தீ பிடித்து, உடல் முழுதும் பரவியது. அலறல் கேட்ட, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அவரை மீட்டு, மாற்று உடை அணிவித்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பகல், 3:30 மணிக்கு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X