தனிமை முகாம்களில் மன அழுத்த பாதிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்ட கொரோனா தனிமை முகாம்களில் போதிய கண்காணிப்பு இன்றி பெரும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோர் சோதனை சாவடிகளில் பரிசோதித்து 3 முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இங்கு 14 நாட்கள் முடிந்தநிலையில் நோய் அறிகுறி இல்லை என்ற பின் வீடுகளுக்கு அனுப்பப் படுகின்றனர்.

போடி, ஆண்டிபட்டி தனிமை முகாம்களில் உள்ளோர் மீது ஆரம்பத்தில் காட்டிய ஆர்வம் இப்போது இல்லை. டாக்டர்கள், மனநல டாக்டர்கள் உரிய நேரத்தில் இருப்பது இல்லை. அலட்சியப் போக்கால் சமீபத்தில் போடி முகாமில் 20 வயதுடையவர் தற்கொலை செய்தார். ஆண்டிபட்டி முகாமில் ஒருவர் நெஞ்சுவலியால் இறந்தார்.பலநுாறு பேர் உள்ள முகாம்களில் மருத்துவம் முறையாக கிடைக்கவில்லை. கடும் மன அழுத்தத்தில் உள்ளோர்களுக்கு மன நல ஆலோசனை கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

கழிப்பறை, பாத்ரூமில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இவ்வளவு பேரை தனிமைப்படுத்தி உள்ளோம் என கணக்கு காட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் முகாம் அமைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். முகாம்களில் தரமான மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X