இது தேவைதானா: கொரோனா எண்ணிக்கை குறித்து தவறான தகவல்கள் | Dinamalar

தமிழ்நாடு

இது தேவைதானா: கொரோனா எண்ணிக்கை குறித்து தவறான தகவல்கள்

Added : மே 23, 2020
Share

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறித்த தகவல் தாறுமாறாக பரவுவதால் மக்கள் மட்டுமன்றி உயர் அதிகாரிகளும் குழப்ப நிலையை சந்திக்கின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா பரவல் ராஜபாளையத்தில் துவங்க இதன் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 69 ஐ எட்டி விட்டது.தினமும் இதன் அறிவிப்பை முறையாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நிலையில் சிலரால் அதிகளவு எண்ணிக்கையை வெளியிட்டு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் எந்த தொற்றும் இல்லாத நிலையில் வெளி மாநிலங்கள்,வெளி ஊர்களிலிருந்து வருபவர்களால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் மாவட்ட எல்லையில் கண்காணிக்கப்பட்டு தனிமைபடுத்தப்படுகின்றனர்.இவர்களுக்கான சோதனையில் சிலருக்கு தொற்று உருவாகிறது.இதை உறுதி செய்ய இரு முறை சோதனை நடக்கிறது.ஆனால் முதல் சோதனையில் தொற்று இருந்தால் அதன் தகவலை சில துறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர்.இந்த தகவல் வெளியே கசிய தொற்று எண்ணிக்கை விபரத்தை சிலர் சமூக வளைதலங்களில் தவறாக வெளியிடுகின்றனர்.

மாவட்ட நிர்வாகமோ இருமுறை சோதனைக்கு பின்புதான் முறையாக அறிவிக்கிறது. இதைதான் மாநில சுகாதாரதுறையும் மாவட்டம் வாரியாக வெளியிடுகிறது. சிலரின் தவறான வெளியீடால் மக்களுக்கு குழப்ப நிலை நீடிக்கிறது.இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவை நடவடிக்கை

வைரஸ் தொற்றால் இறப்பு , மருத்துவ அதிகாரிக்கு கொரோனா , தனியார் நிறுவன விமானம் வட்டமடித்தது என்பது போன்று தவறான தகவலை சிலர் பரப்புவதால் மக்கள் மற்றும் துறை அதிகாரிகள் குழப்பம் அடைகின்றனர் . இது போன்று தவறான தகவல்களை வெளியிடு வோரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசங்கர்,தனியார் ஊழியர்,ராஜபாளையம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X