சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அணில், குருவிகள் கொன்று குவிப்பு ஊரடங்கில் கிராமங்களில் கொடூரம்

Added : மே 23, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பகுதிகளில் ஊரடங்கை பயன்படுத்தி அணில், முயல், மைனா, குருவிகளை கும்பல் ஒன்று கொன்று குவிக்கிறது.

ஊரடங்கால் கிராம பகுதிகளில் பொழுது போக்கிற்காக சுற்றி திரியும் கும்பல் மரங்களில் உள்ள பொந்துகளில் வசிக்கும் முயல்களை பொறி வைத்து பிடிக்கின்றனர். இன்னும் சிலர் கம்பி கூடு தயார் செய்த தேங்காய் துண்டுகளை வைத்து அணில்களை பிடிக்கின்றனர். சிலர் வலையை விரித்து தானியங்களை கொட்டி உண்ண வரும் மைனாக்கள், குருவிகளை கொத்து கொத்தாக பிடிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக அருப்புக்கோட்டையை சுற்றிய ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, புலியூரான், செம்பட்டி உட்பட பகுதிகளில் தினமும் நுாற்றுக்கணக்கான அணில்கள், மைனாக்கள், முயல்கள், குருவிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. அழியும் பறவைகளான மைனா, குருவிகளை பாதுகாக்கும் முயற்சியில் அரசே ஈடுபடும் நிலையில் சிலரால் கொன்று குவிப்பது பலரை வேதனை அடைய செய்கிறது.

சிக்கினால் 5 ஆண்டு சிறை

ஊரடங்கினால் மக்கள் இதுபோன்று செயலில் இறங்கி உள்ளனர். புகார்கள் வந்துள்ளது. அணில், மைனா, முயல் மற்றும் அழியும் நிலையில் உள்ள பறவை இனங்களை கொல்வது சட்டபடி குற்றம். இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை , 25 ஆயிரம் ரூபாய் அபராரதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இது தெரியாமல் பறவைகளை அழிக்கின்றனர். இதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

-கோவிந்தன், வனச்சரக அலுவலர், வத்திராயிருப்பு .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X