கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
 கண்மாய்க்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

போடி:போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய்க்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.

இங்கு மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய், பங்காருசாமி கண்மாய், சங்கரப்பன் கண்மாய்கள் உள்ளன. மழைக்காலங்களில் குரங்கணி கொட்டகுடி ஆற்றுப்பகுதியிலிருந்து வெளியேறும் நீர் இக்கண்மாய்களுக்கு வரும். ஆண்டு தோறும் ஜனவரி முதல் மே வரை முக்குளப்பான், பாம்புதாரா, கூழைக்கிடா, மஞ்சள் மூக்குநாரை ஆகிய உள்ளாட்டு பறவைகளும், பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், கடல்சார்ந்த பகுதிகளில் வசிக்கும் கொக்கு வகைகளும் இங்குள்ள அடர்ந்த மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் மேற்கொள்ளும்.

கண்மாய் கரையோரம், ஆழமில்லாத நீர் பிடிப்பு பகுதிகளிலும் கூட்டமாக இரைதேடும். ஜூன்,ஜூலையில் சொந்த பகுதிகளுக்கு சென்று விடும். மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் இருப்பு சிறிது உள்ள நிலையில் மீன்கள் அதிகம் உள்ளன.

தற்போது ஆஸ்திரேலியா நாட்டு பறவைகள் அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கியுள்ளதை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்த்து ரசிக்கின் றனர்.மக்கள் கூறுகையில்: பறவை இனங்கள் அழியாமல் இருக்க மீனாட்சியம்மன் கண்மாய் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X