பொது செய்தி

தமிழ்நாடு

புகையால் தான் எத்தனை

Added : மே 23, 2020
Share
Advertisement

காற்றில் பரவும் புகை

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வந்த நிலையில் தற்போது அதை கடைபிடிப்பதில்லை. மக்கள் அதிகம் நடமாடும் பஜார் , பஸ் ஸ்டாண்டில் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கின்றனர். அனைத்து கடைகளிலும் , தீப்பெட்டி, லைட்டர் போன்றவற்றை புகை பிடிக்க ஏதுவாக வெளியிலே வைத்துள்ளதால் அங்கே நின்றப்படி புகையை ஊதுகின்றனர். இதை காற்றில் சுவாசிக்கும் பாலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

லெவின்ராம், தலைவர் ரவுத்திர தமிழர்கள் அமைப்பு, சிவகாசி.

தானாகவே தவிர்ப்பது அவசியம்

புகை பிடிப்பவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரை உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்க செய்யும். அதுமட்டுமின்றி பொது இடங்களில் புகை பிடிப்பது அனைவரையும் பாதிக்கும். அதிலும் கர்ப்பிணி, குழந்தைகளை நோய் பாதிப்பிற்கு ஆளாக்கும். அரசு தடை விதித்தாலும் புகை பிடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தன் தவறை உணர்ந்து தானாகவே தவிர்ப்பது அவசியம்.

விஜய், கல்லுாரி மாணவர் ஸ்ரீவில்லிபுத்துார்.

புகை மனிதனுக்கு பகை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டபடி குற்றம் என்றாலும் இதை பலரும் அலட்சியம் செய்கின்றனர். புகை பிடிப்பவர்களை விட அவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் மக்கள் தான் அதிக பாதிக்கின்றனர். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என சிகரெட் பாக்கெட், சினிமா தியேட்டர்களில் வெளியிட்டும் யாரும் பின்பற்றுவதில்லை. ஒட்டு மொத்த குடும்பத்தை பாதிக்கும் புகை பிடித்தலுக்கு அரசுதான் 'குட் பை' சொல்ல வேண்டும்.

ரேணுகா தேவி, உதவி பேராசிரியை, அருப்புக்கோட்டை.

சட்டத்தை மீறுகின்றனர்

பொது இடங்களில் புகை பிடிப்பதால் குழந்தைகள், இளைஞர்கள் என பலரும் பாதிக்கின்றனர். பஸ் ஸ்டாப், காய்கறி சந்தை,டீக்கடைகள் முன்பு புகைபிடிப்பது தொடர்கிறது.இவர்கள் மீது போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய சில போலீசார் கூட சட்டத்தை மீறுகின்றனர். புகைபிடிப்பவர்களை விட புகையை சுவாசிப்பவர்கள் தான் அதிகமாக புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

காளிராஜன், அலைபேசி கடை உரிமையாளர் சாத்துார்.

தயாரிப்பை தடை செய்யுங்க

வேலைகளை பார்த்த அலுப்பில் மன ஆறுதல் ஏற்படும் என நினைத்து பலர் சிகரெட் பிடிக்கின்றனர். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு சிறு வயதிலே வலுவிழந்து காணப்படுகின்றனர். சுவாச கோளாறு, புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கி அவர் மட்டுமல்லாமல் அந்த குடும்பமே பாதிக்கிறது. அறியாமல் எறியப்படும் சிகரெட் துண்டுகளால் தீ உருவாகி பல இடங்களில் விவசாயிகளுக்கு பொருள் இழப்பு ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் சிகரெட் தயாரிப்பை தடை செய்ய வேண்டும்.

அழகர்சாமி, விவசாயி, ஆத்திகுளம்.

கட்டுப்படுத்தலாமேபொது இடங்களில் புகைபிடித்தல் தீங்கு என்பதை அரசு கூறிக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை புகை பிடிப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். புகைப்பவர்களுக்கு ஏற்படும் புற்று நோய் போன்றபாதிப்புகள் மறைமுகாமாக அருகில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்தும் என்பதால் பொது இடத்தில் புகைப்பிடிப்பவர்களை போலீசார்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
பொன்னுலட்சுமி, குடும்பத்தலைவி ராஜபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X