கூடலுார், லோயர்கேம்ப், பளியன்குடி, கழுதைமேடு, பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் பெய்யும் கோடைமழையில் தட்டாம்பயிறு, எள், மொச்சை, அவரை உள்ளிட்டவை பயிரிடப்படும். ஆனால் இந்தாண்டு அவ்வப்போது சாரல் மழையாக மட்டுமே பெய்ததால் மண்ணில் ஈரப்பதம் இல்லாததாலும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவியதாலும் பயிரிடப்பட்ட பல செடிகள் காய்ந்து வருகின்றன.
மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் களை எடுக்கும் பணியை கடந்த சில நாட்களாக துவங்க வில்லை. தற்போது இருக்கின்ற செடிகளையாவது காப்பாற்ற வேண்டும் என்றால் களை எடுத்து, தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் அதனை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விவசாயிகள் கூறும்போது, மழை பெய்து விட்டால் தற்போது கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து செடிகளைகாப்பாற்றி விடலாம். நடவு செய்ததில் இருந்து மழை அதிகமில்லாமல் பல செடிகள் முளைக்கவேயில்லை. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் களை எடுக்கப்படுகிறது,'என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE