அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலாஎங்களிடம் சொல்லுங்கள்; அரசிடம் சொல்கிறோம் உங்கள் குறைகளை தெரிவிக்க 98940 09507| Dinamalar

அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலாஎங்களிடம் சொல்லுங்கள்; அரசிடம் சொல்கிறோம் உங்கள் குறைகளை தெரிவிக்க 98940 09507

Added : மே 23, 2020
Share

பாதிப்பில் எலெக்ட்ரிக் கடைகள்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் எலெக்டரிக்கல் கடைகள் திறக்கப்பட்டாலும் முழு அளவில் செயல்பாட்டில் இல்லை. பல இடங்களில் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. மேலும் உற்பத்தி பொருட்கள் வாங்க மதுரை போன்ற பெருநகரங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஊரடங்கு தளர்வு வந்தாலும் எங்கள் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணமோ, கூடுதல் தளர்வுகள் அளிக்கவோ முன் வர வேண்டும்.

சங்கர், ராஜபாளையம்.

இருப்பு இல்லை என்பதே பதில்

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சமாதி ரோடு வள்ளலார்கோயில் எதிர்ப்புறம் உள்ள ரேஷன் கடையில் எப்போது சென்று பொருட்கள் கேட்டாலும் இருப்பு இல்லை என்றே பதில் கூறுகின்றனர். இவ்வாறு கூறினால் எப்படி நியாயமாகும். முறையாக பொருட்களை வழங்குவதே இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்கம், அருப்புக்கோட்டை

பஸ்சை இயக்குங்கள்

ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த பல தொழிலாளர்கள் சிவகாசி, ராஜபாளையத்தில் உள்ள ஜவுளி கடைகள், அலைபேசி கடைகளில் பணிபுரிநகின்றனர். தற்போது கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பஸ்கள் இயங்காததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்.

சரிவை சந்தித்த வெள்ளரி விவசாயம்

மாவட்டத்தில் காரியாபட்டி, சாத்துார் பகுதிகளில் அதிகளவில் வெள்ளரி விவசாயம் செய்யப் படுகிறது. கோடை பணப்பயிரான வெள்ளரி ஊரடங்கால் விற்பனையை இழந்தது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால் கோடை காலத்திலும் வெள்ளரி விற்பனை பெரிய அளவில் இல்லை. மக்காசோளம், பருத்தி விவசாயத்தில் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு வெள்ளரியே பணப்பயிராக உதவும். ஊரடங்கால் வெள்ளரி விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

முருகன், சிவகாசி.

பதுக்கப்படுகிறதா பச்சரிசி

ஸ்ரீவில்லிபுத்துார் தேரடி பக்கம் ரேஷன் கடையில் பச்சரிசி கேட்டால் இல்லை என்கின்றனர். புழுங்கல் அரிசியை மட்டும் வாங்கி கொள்ள அறிவுறுத்துகின்றனர். அரசு அனைத்து பொருட்களையும் இலவசம் என்று தானே அறிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் எப்போது சென்று கேட்டாலும் இதையே கூறுகின்றனர். புழுங்கல் அரிசி மட்டுமே வழங்குகின்றனர். பச்சரிசியை பதுக்குகின்றனரா என குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X