தனிமை குளறுபடியால் தொற்றுக்கு வாய்ப்பு| Dinamalar

தனிமை குளறுபடியால் தொற்றுக்கு வாய்ப்பு

Added : மே 23, 2020
Share
ஸ்ரீவில்லிபுத்துார்,:வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் தனியார் கல்லுாரிகளில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் உடனுக்குடன் சோதனை செய்யாததால் கூடுதல் தொற்றுக்கு வாய்ப்பு நிலவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த நிலையில் மாவட்ட எல்லையில் கண்காணித்து தனியார்

ஸ்ரீவில்லிபுத்துார்,:வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் தனியார் கல்லுாரிகளில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் உடனுக்குடன் சோதனை செய்யாததால் கூடுதல் தொற்றுக்கு வாய்ப்பு நிலவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த நிலையில் மாவட்ட எல்லையில் கண்காணித்து தனியார் கல்லுாரிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 4 நாட்களை கடந்தும் பல இடங்களில் முறையான மருத்துவ பரிசோதனை செய்யவில்லை.

இது வரை பாதுகாப்பாக இருந்தவர்கள், இல்லாதவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் சங்கமித்து இருப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என பலரும் அஞ்சுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தை சேராத தேனி , சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இங்கு தங்க வைக்கபட்டுள்ளனர்.

திருச்சுழி, நரிக்குடி பகுதியினர் ஸ்ரீவி.,யிலும் ஸ்ரீவி., வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் காரியாபட்டியிலும் தங்க வைக்கபட்டுள்ளனர்.முதலில் இவர்களை அவரவர் பகுதி முகாம்களுக்கு அனுப்பி இதுபோன்ற குளறுபடிகளை களைவதோடு உடனுக்குடன் பரிசோதனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X