போடி:போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் விவசாயம், பால் மாடுகள் வளர்ப்பதையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பாலிடெக்னிக் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பால் மாடு, நான்கு நாட்களுக்கு முன் காய்ச்சல், உணவு செரிக்காமல் உடல்நலக்குறைவால் இறந்தது. இது போல இந்திராகாலனியை சேர்ந்த தர்மர், அண்ணா தெருவை சேர்ந்த தங்கராஜ், தவமணி ஆகியோருக்கு சொந்தமான மாடுகளும் தொடர்ந்து இறந்தன.
சில்லமரத்துப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் டி.கிருஷ்ணன் கூறுகையில்: அரசு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தும் பயனின்றி மாடுகள் இறந்துள்ளன. இதில் மாவட்ட நிர்வாகம் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE