வேலையில்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு | Dinamalar

வேலையில்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு

Added : மே 23, 2020
Share

ஆண்டிபட்டி:100 நாள் வேலைத்திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணிகள் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக குறைந்த எண்ணிக்கை யிலானவர்களுக்கு மட்டும் கண்மாய், வரத்துக்கால்வாய் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகிறது.

நோய் தடுப்பை கருத்தில் கொண்டு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணிகள் வழங்க அரசு தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் பயனாளிகளில் 30 சதவீதத்தினர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் இதில் அடங்குவர்.

பலரின் வாழ்வாதாரம் இந்த பணியை நம்பி உள்ளது. உடல் வலு இருந்தும் பணியில் இருந்து அரசு புறக்கணிப்பதால் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தங்களுக்கும் இத்திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X