பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரைக்கும் கிடைக்குமாஅரசு பணியாளர் சிறப்பு பஸ் 

Added : மே 23, 2020
Share
Advertisement

வடமதுரை:கொரோனா 4வது கட்ட ஊரடங்கில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல தளர்வுகள் தரப்பட்டுள்ளன. 50 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப் பட்டு உள்ளது.

இவர்களது வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்துார், வத்தலக்குண்டு போன்ற வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வடமதுரை, அய்யலுார், எரியோடு பகுதிக்கு இந்த வசதி இன்னும் செய்து தரப்படவில்லை.

தாலுகா தலைமையிடமான வேடசந்துாருக்கு வடமதுரை பகுதியில் இருந்து ஏராளமான அரசு துறையினர் பணிக்கு செல்கின்றனர். எனவே இந்த இரு மார்க்கங்களையும் இணைக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை, அய்யலுார், எரியோடு வழியே வேடசந்துாருக்கு அரசு பணியாளர் சிறப்பு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X