புகார் பெட்டி : தேனி

Added : மே 23, 2020
Share
Advertisement
 புகார் பெட்டி : தேனி

கண்மாயில் சேரும் கழிவுநீர்

பெரியகுளம் தென்கரை பேரூராட்சி கழிவுநீர் தாமரைக்குளம் ராஜ வாய்க்கால் வழியாக அங்குள்ள கண்மாயில் சேர்கிறது. சமூக ஆர்வலர்களால் ஒருபுறம் கண்மாய் துார்வாரும் பணி நடத்து கொண்டிருக்கும் போது கழிவுநீர் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--கே. சிவகார்த்திகேயன், தாமரைக்குளம்.

வேகத்தடையால் சிரமம்

பெரியகுளம் -தேனி ரோடு கைலாசபட்டியில் குறிப்பிட்ட இடைவெளியில் அதிகம் வேகத் தடைகளை அமைத்துள்ளனர். இந்த இடத்தை வாகனத்தில் கடந்து செல்வோர் சிரமம் அடைகின்றனர். இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -எஸ். சார்லஸ், தேனி.

சுற்றுச்சுவர் சேதம்

ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. முழுமையாக பாதிப்பு ஏற்படும் முன் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

-டி.சரவணன், ஒக்கரைப்பட்டி

வாகன ஓட்டிகள் அவதி

ஜம்புலிபுத்துாரில் இருந்து சீரங்காபுரம் செல்லும் ரோடு புதுப்பிப்பில் ஜல்லிக்கற்கள் மட்டும் பரப்பி மண்ணால் மூடி உள்ளனர். பல மாதமாகியும் பணி முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சீனிவாசன், ஜம்புலிபுத்துார்

மண்குவியலால் விபத்து

போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து கிருஷ்ணாநகர் வரை ரோட்டின் இருபுறமும் மண்குவியல் களாக உள்ளன. வாகனங்கள் வேகமாக செல்லும் போது அதில் இருந்து வெளியேறும் துாசுகள் பொதுமக்களின் கண்களை பதம் பார்க்கிறது. விபத்தும் ஏற்படுகிறது. மண் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--ஆர்.ரஞ்சித்குமார்,பி.ரெங்கநாதபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X