பொது செய்தி

தமிழ்நாடு

'இ- சேவை' மையத்தில் 'இ-பாஸ்' மட்டுமே

Added : மே 23, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இச்சமயத்தில் திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு உட்பட அத்தியாவசிய தேவைகளுக் காக மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் செல்ல 'இ--பாஸ்' வழங்கப்படுகிறது.ஊரடங்கால்
'இ -சேவை' மையங்கள் மூடப்பட்டதால் சாதி, வருமானம் உட்பட 15 வகையான சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருந்தது.

தற்போது அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன.திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் மற்றும் 9 தாலுகாக்களில் இம்மையங்கள் செயல்பட துவங்கியுள்ளன. அதேசமயம் விரல் ரேகை பதிவு மூலம் கொரோனா பரவாமல் இருக்க சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. அவசரம், அத்தியாவசிய தேவைக்கு 'இ- பாஸ்' பெற மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தினமும் 40 பேருக்கு டோக்கன் முறையில் 'இ -பாஸ்' பெற இலவசமாக விண்ணப்பித்து கொடுக்கப்படுகிறது. பாஸ் பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் வர வேண்டும். ஊரடங்குக்கு பிறகே சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் பணிகள் தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X