திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே ரெட்டியப்பட்டி பாரதிநகரில் கூடைகள் பின்னும் தொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட குடிசைகளில் 40 ஆண்டுகளாக வசிக்கின்றனர்.
சிறுமலை அடிவாரத்தில் கிடைக்கும் உன்னிகுச்சிகளை சேகரித்து கூடைகள் பின்னுகின்றனர். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்துகின்றனர்.கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக கூடைகள் விற்பனை பாதித்து குறைந்தபட்ச வருமானம் கூட இன்றி பசி, பட்டினியில் வாடுகின்றனர்.
தொழிலாளர்கள் கலியமூர்த்தி, ராமு, மாரியப்பன் கூறியதாவது: பஞ்சாரம், சாணித்தட்டு, ரைஸ்மில் கூடை தயாரிக்கிறோம். ரூ.100 முதல் ரூ.200 வரை விற்கிறோம். பிளாஸ்டிக் வருகையால் தொழில் நசுங்கிவிட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி விட்டோம்.
குடிசை வீடுகளுக்கு 40 ஆண்டுகளாக மின்வசதியும் இல்லை. அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தோம். வேறு இடம் தருவதாக கூறுகின்றனர். எங்களுக்கு குடிநீர், மின்விளக்கு வசதி வேண்டும். நிவாரணம் எதுவும் கிடைக்காமல் தவிக்கிறோம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE