திண்டுக்கல் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கும் அ.தி.மு.க.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கும் அ.தி.மு.க.,

Added : மே 23, 2020
Share
வத்தலக்குண்டு:திண்டுக்கல்லை அ.தி.மு.க., நிர்வாகத்தில் ஒரே மாவட்டமாக வைத்துள்ளனர். 2016 தேர்தலில் வென்ற சீனிவாசன் அமைச்சராக உள்ளார். முன்னாள் அமைச்சர் விசுவநாதனும் இங்கு முக்கிய புள்ளியாக உள்ளார். இவ்வாறு மாவட்டத்தில் இரு பெரும்புள்ளிகள் இருப்பது அவ்வப்போது தொண்டர்களிடையே பனிப்போரை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலில் சிக்கல் ஏற்படும் என

வத்தலக்குண்டு:திண்டுக்கல்லை அ.தி.மு.க., நிர்வாகத்தில் ஒரே மாவட்டமாக வைத்துள்ளனர். 2016 தேர்தலில் வென்ற சீனிவாசன் அமைச்சராக உள்ளார். முன்னாள் அமைச்சர் விசுவநாதனும் இங்கு முக்கிய புள்ளியாக உள்ளார்.

இவ்வாறு மாவட்டத்தில் இரு பெரும்புள்ளிகள் இருப்பது அவ்வப்போது தொண்டர்களிடையே பனிப்போரை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலில் சிக்கல் ஏற்படும் என அக்கட்சி மேலிடம் நினைக் கிறது.

எனவே மாநகராட்சி பகுதிகளைக் கொண்ட மாநகர் மாவட்டம், நத்தம், நிலக்கோட்டை, ஆத்துார் ஆகிய 3 தொகுதிகளைக் கொண்ட கிழக்கு மாவட்டம், வேடசந்துார், பழநி, ஒட்டன்சத்திரம் தொகுதிகள் அடங்கிய மேற்கு மாவட்டம் என பிரிக்கப்பட உள் ளது.

இது குறித்து அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், ''மாநகருக்கு அமைச்சர் சீனிவாசன், கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தற்போதைய வேடசந்துார் எம்.எல்.ஏ., பரமசிவம் அல்லது பழநி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மூத்த நிர்வாகியை மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது'' என்றார்.

ஊராட்சி செயலாளர் பதவிகள், தொழில்நுட்ப அணியில் 4 மண்டல நிர்வாகிகள் நியமித்தலை தொடர்ந்து மாவட்டமும் பிரிக்கப்படுவதால் அ.தி.மு.க., தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருவதாக தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X