மிளகாய் பழுத்ததால் விலையில்லை பழநி விவசாயிகள் கவலை| Dinamalar

மிளகாய் பழுத்ததால் விலையில்லை பழநி விவசாயிகள் கவலை

Added : மே 23, 2020
Share

நெய்க்காரப்பட்டி:பழநி, நெய்க்காரப்பட்டி அருகே பச்சை மிளகாய் செடிலேயே பழுத்ததால் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பழநி வட்டாரத்தில் ஆண்டு முழுவதும் அதிகளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பச்சை மிளகாய் பறிக்க ஆட்கள் வராததால் செடியிலேயே பழுத்து விட்டது.தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் ஆட்கள் வருகின்றனர். ஆனால் மிளகாய் பழுத்ததால் விலை குறைந்து விட்டது. எதிர்பார்த்த விலையின்றி விவசாயிகள் பாதித்துள்ளனர்.

கரடிக்கூட்டம் விவசாயி முருகேசன் கூறியதாவது: மூன்று ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்து உள்ளேன். ஏக்கருக்கு ரூ.70 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன். 2 மாதங்களுக்கு முன் ஒரு முறை பறித்தேன். கொரோனா பாதிப்பால் மிளகாய் பறிக்க முடியாததால் செடியிலேயே பழுத்து விட் டது. இதனால் ரூ.25க்கு விற்க வேண்டிய மிளகாய் கிலோ ரூ.10க்குதான் விற்கும். இனி செடியில் மிளகாய் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் செடிகளுடன் உழுது விட எண்ணியுள்ளேன், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X