திண்டுக்கல்: ஊரடங்கால் குக்கிராமங்களிலும் விவசாய, தினக்கூலி பணிகள் 2 மாதங்களாக முடங்கியுள்ளன. உணவுப் பொருளுக்கான விலைவாசி 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. போதிய வருவாயின்றி அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்காக ஏழை, நடுத்தர குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர்.
நிலைகுலைந்த பெண்கள்
வங்கி, வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணைக் காலத்தை, ரிசர்வ் வங்கி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. ஆனால் கிராமங்களில் தனியார் கடன், நிதி நிறுவனங்களின் அடாவடி வசூல் துவங்கியுள்ளது. செம்பட்டி, சின்னாளபட்டி, அம்மையநாயக்கனுார் பகுதிகளில் மகளிர் பலர் இப்பிரச்னையால் நிலைகுலைந்துள்ளனர்.
மகளிர் சுய உதவிக்குழுவினர் சிலர் கூறுகையில், ''வங்கி சார்ந்த கடனுக்கு அரசு அவகாசம் அளித்துள்ளது. பெண்கள் குழுக்களாக இணைந்து, தனியார் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகளிடம் சுயதொழில் கடன் வாங்கியுள்ளோம். சில நாட்களாக வசூல் நெருக்கடியை அதிகரித்துள்ளனர்.
கூட்டு வட்டி தவணையை,கந்துவட்டி முறையில் வசூலிக்க முற்படுகின்றனர். ஊரடங்கால் வருமானம் இல்லாத சூழலில், தவணை செலுத்தும் வழி தெரியாமல் உள்ளோம்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE