பொது செய்தி

இந்தியா

'சமூக வானொலிகளில் விளம்பர நேரம் அதிகரிப்பு' : பிரகாஷ் ஜாவடேகர்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: சமூக வானொலிகளில், விளம்பரத்துக்கான நேரத்தை, ஒரு மணி நேரத்துக்கு, ஏழு நிமிடத்திலிருந்து, 12 நிமிடங்களாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாட்டில் உள்ள, 290 சமூக வானொலி நிலையங்கள் வழியாக, நாட்டு மக்களிடம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், நேற்று பேசினார்,அவர் பேசியதாவது:சமூக வானொலி நிலையம் அமைப்பதில் ஏற்படும் செலவில், 75 சதவீதத்தை,

புதுடில்லி: சமூக வானொலிகளில், விளம்பரத்துக்கான நேரத்தை, ஒரு மணி நேரத்துக்கு, ஏழு நிமிடத்திலிருந்து, 12 நிமிடங்களாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாட்டில் உள்ள, 290 சமூக வானொலி நிலையங்கள் வழியாக, நாட்டு மக்களிடம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், நேற்று பேசினார்,latest tamil newsஅவர் பேசியதாவது:சமூக வானொலி நிலையம் அமைப்பதில் ஏற்படும் செலவில், 75 சதவீதத்தை, மத்திய ஒலிபரப்புத்தறை அமைச்சகம் ஏற்றுக் கொள்கிறது. தினமும் ஏற்படும் செலவுகளை, அந்த நிலையம் ஏற்றுக் கொள்கிறது. இப்போது, சமூக வானொலிகளில், ஒரு மணி நேரத்துக்கு, ஏழு நிமிடம், விளம்பரத்துக்காக ஒதுக்கப்படுகிறது. 'டிவி' சேனல்களில், 12 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

வானொலி நிலையங்களுக்கும், டிவி சேனல்களுக்கு வழங்குவதுபோல், 12 நிமிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், வானொலி நிலையங்களுக்கு வருவாய் அதிகரிக்கும். உள்ளூர் விளம்பரங்கள் அதிகளவில், சமூக வானொலி நிலையங்களில் ஒலிபரப்ப வாய்ப்பு ஏற்படும். சமூக வானொலி நிலையங்கள், மாற்றத்துக்கான ஏஜன்ட்களாக உள்ளன. தினமும், பல லட்சம் மக்கள், சமூக வானொலிகளில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகயை கேட்கின்றனர். சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsஎப்.எம்., வானொலி நிலையங்களில், செய்திகள் ஒலிபரப்பப்படுவது போல், சமூக வானொலி நிலையங்களிலும், செய்திகள் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற நோய்களை விரட்டியது போல், கொரோனா வைரசையும், நாம் நிச்சயம் விரட்டியடிப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-மே-202012:43:18 IST Report Abuse
Lion Drsekar உலக ரேடியோ என்ற ஒரு ஆப்ஸ் இருக்கிறது அதை கைபேசியில் ஓபன் செய்து எந்த நாட்டில் எந்த புள்ளியில் அதாவது எந்த நகரத்தில் கையை வைக்கிறோமோ அந்த நாட்டின் ரேடியோ நேரலை ஒளிபரப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது, இதை நான் பலருக்கும் அனுப்பி வாங்கிக்கட்டிக்கொண்டேன், காரணம், மிக அதிக அளவில் குறிப்பாக மலையாளத்தில் ஒரு குறிப்பிட்ட மத பிரச்சார வானொலியாக இருக்கிறது, அதுவும் துபாய் போன்ற நாடுகளிலும், ஆகவே சமூக வானொலியென்பது மத பிரச்சார ரேடியோ, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-மே-202011:48:37 IST Report Abuse
Bhaskaran Palaya vivitha bihaarthiyil oru theepaavalikku mun iruntha vaarathil orunaal kaalai elemukaal maniyilirunthu onbathu Mani varai oliparapaana nigalchiyil oreoru thiraipadapaadalaimattum oliparapinaargal matra neram muluvathum vilambaram athanai porumayaaga ketta abaakiya saali naan
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
23-மே-202010:24:21 IST Report Abuse
M.P.Madasamy சமூக நீதி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X