பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் போட்டி தேர்வுகள்இணையதள காணொளியில் பயிற்சி

Added : மே 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்: மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் இணைய தளத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, நடைமுறையில் உள்ள ஊரடங்கினால் பயிற்சி வகுப்புகள் நடத்த முடியவில்லை. தேர்வர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இணையதளத்தில் உரிய செயலிமூலம் பயிற்சி அளிக்க வழிமுறைகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, www.tamilnaducareeserives.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழிகற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரிதேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர் முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணைக் கொடுத்து உள்ளே நுழைந்து, போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வுசெய்து அதில்வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.மாதிரித்தேர்வு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குருப்_2 தேர்வுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X