பா.ம.க., கட்சியினர் 15 பேர்தி.மு.க.,வில் இணைந்தனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., கட்சியினர் 15 பேர்தி.மு.க.,வில் இணைந்தனர்

Added : மே 23, 2020
Share

கள்ளக்குறிச்சி: பா.ம.க., கட்சியைச் சேர்ந்த 15 பேர், அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ரிஷிவந்தியம் சட்டபை தொகுதி எடுத்தனுாரைச் சேர்ந்த பா.ம.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தலைமையில் 15 பேர், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, கவுதமசிகாமணி ஆகியோர் புதியதாக கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், உதயசூரியன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கன், வெங்கடாசலம், பொறியாளர் அணி பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X