கோர்ட் கட்டடத்திற்கு இடம்: கலெக்டர், நீதிபதி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோர்ட் கட்டடத்திற்கு இடம்: கலெக்டர், நீதிபதி ஆய்வு

Added : மே 23, 2020
Share
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் கோர்ட்டுக்கு நிரந்தர கட்டடம் கட்ட இடம் தேர்வு குறித்து கலெக்டர், நீதிபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.விக்கிரவாண்டி தாலுாகாவில் புதிய கோர்ட் தற்போது கச்சியப்ப செட்டி தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.இந்நிலையில், நேற்று காலை புதிய கோர்ட் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை விக்கிரவாண்டி அடுத்த

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் கோர்ட்டுக்கு நிரந்தர கட்டடம் கட்ட இடம் தேர்வு குறித்து கலெக்டர், நீதிபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.விக்கிரவாண்டி தாலுாகாவில் புதிய கோர்ட் தற்போது கச்சியப்ப செட்டி தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.இந்நிலையில், நேற்று காலை புதிய கோர்ட் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஊராட்சிக்குட்பட்ட அடைகலாபுரத்தில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 84 செண்ட் இடத்தை கலெக்டர்அண்ணாதுரை, மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி ஆகியோர் பார்வையிட்டுதேர்வு செய்தனர்.நீதிபதி ஆனந்தி , கோர்ட் இடம் தேர்வு குறித்து சென்னை ஐகோர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதாக கலெக்டரிடம் தெரிவித்தார்.கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., திட்ட இயக்குனர் மகேந்திரன், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், தாசில்தார் பார்த்திபன், பி.டி.ஓ.,க்கள் எழிலரசு, நந்தகோபாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X