பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தனர்

Added : மே 23, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் அரசு பணியாளர்களின் உரிமைகளை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து அரசு பணியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.தமிழக அரசு, அரசு பணியாளர்களின் உரிமைகளான 18 மாத அகவிலைப்படியை நிறுத்தியது. பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. விடுப்பு கால பயணச் சலுகையை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணியாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சிங்காரம், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராம்குமார், செயலாளர் அய்யனார், பொருளாளர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X