பொது செய்தி

தமிழ்நாடு

காளி கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்

Added : மே 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும், தோஷ நிவர்த்திக்காகவும் சித்திரை அமாவாசையையொட்டி சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது.இதையொட்டி பத்ரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மேலும், கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கும் மகா தீபாராதனை மற்றும் அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பத்ர காளியம்மன் கவசங்கள் பாடி, யாகத்தீ வளர்க்கபட்டு, மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. கோவில் ஸ்தாபகர் சிவக்குமார் தலைமையில் நிகும்பலா யாகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X