வணிகர்கள் உரிமம் பெற கெடுபிடி | Dinamalar

இந்தியா

வணிகர்கள் உரிமம் பெற கெடுபிடி

Added : மே 23, 2020
Share

புதுச்சேரி; வணிகர்கள் உரிமம் பெற கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும் என உழவர்கரை நகராட்சிக்கு சமூக இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இது குறித்து சமூக இயக்கங்கள் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பு ஊடரங்கால், அனைத்து வணிகர்களும் கடைகளை மூடினர். இதனால், அனைத்து வணிகர்களும் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து, வங்கிக் கடன், வணிகக் கடன் அடைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், உரிமம் பெற்று தான் கடை திறக்க வேண்டுமென உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், வணிகர்களுக்கு நெருக்கடி தருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.மேலும் சிறு கடை வணிகர்கள், நிறுவனத்தை துவக்கிய தினத்தில் இருந்து இன்று வரை அபராதம் செலுத்தி உரிமம் பெற வேண்டுமென கூறுகின்றனர்.வணிகர்கள் மற்றும் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலுக்கு உரிமம் பெறுவதைக் கால நீட்டிப்பு செய்து, ஒரு முறை கட்டணம் என்ற இலகுவான முறையில் வசூலிக்க வேண்டும். இல்லையெனில் நகராட்சியைக் கண்டித்து வணிகர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X