இந்தியா

50 சதவீத சம்பளம் குறைக்க பரிந்துரை

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; தன்னாட்சிக் கல்லுாரி ஆசிரியர்கள், ஊழியர்களின் ஊதியத்தில் 50 சதவீதத்தை குறைக்கும் நிதி செயலரின் பரிந்துரைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தன்னாட்சி கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கு காரணமாக நிதிச்சுமையை காரணம் காட்டி கடந்த மார்ச் மாத ஊதியத்தை கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் 24 ம் தேதி தான் நிதித் துறை வழங்கியது. ஏப்ரல் மாத ஊதியம் மற்ற அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் உரிய தினத்தன்று முழு ஊதியமாக வழங்கிய நிதித் துறை, தன்னாட்சி கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு இது நாள் வரை வழங்கவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் 18 ம் தேதி நிதித் துறை செயலர், முதல்வர் நாராணசாமிக்கு அனுப்பிய கோப்பில் தன்னாட்சி கல்லுாரி ஆசிரியர், ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் நிதி நிலைமை சீரடையும் வரை 50 சதவீத ஊதியம் வழங்க பரிந்துரை செய்துள்ளார்.இதனை கண்டு அதிருப்தி அடைந்து முதல்வரிடம் முறையிடப்பட்டது. எங்களின் கோரிக்கை கேட்ட முதல்வர் ஏப்ரல் மாத சம்பளம் முழுவதுமாக வழங்கப்படும் என உறுதியளித்தார். ஏழாவது ஊதியக் குழு முறையாக அமல்படுத்தாமல் ஆசிரியர்கள், ஊழியர்கள் மிகுந்த மன உலைச்சலில் உள்ள நிதி செயலரின் பாரபட்ச செயல் கண்டனத்திற்குரியது.நிதி செயலரின் பரிந்துரையை புறந்தள்ளி முழு ஊதியத்தையும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X